வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு  அமைச்சு

இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்திற்காக, தொடர்ச்சியான மின் விநியோக அலகுகள் 02  மற்றும்  கணினி  சேர்வர் இயந்திரங்கள் 02  என்பவற்றினை  விநியோகித்தல், நிறுவுதல், பரீட்சித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளைக் கொள்வனவு செய்வதற்கான கேள்வி அறிவித்தல்.

விலைமனு இலக்கம் - NIPO/PRO – 02/COM-01

1. வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்திற்காக, தொடர்ச்சியான மின் விநியோக அலகுகள் 02 மற்றும் கணினி சேர்வர் இயந்திரங்கள் 02 என்பவற்றிளை  விநியோகித்தல், நிறுவுதல், பரீட்சித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய     செயற்பாடுகளின் பெறுகை நடவடிக்கைகளுக்காக தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள விலைமனுதாரர்களிடமிருந்து முத்திரை இடப்பட்ட விலைமனுக்கள் கோரப்படுகின்றன.

2. தேசிய போட்டித்தன்மைமையான விலைமனு  கோரல் நடைமுறைகளைப் பயன்படுத்தி விலைமனு கோரல் மேற்கொள்ளப்படுவதுடன் விலைமனு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் பொருத்தமான மற்றும் தகைமை பெற்ற சகல விலைமனுதாரர்களுக்கும்  விலைமனு கோரல்  திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.

 3.    தேவைப்பாடுகள் தொடர்பான விரிவான விளக்கக்குறிப்பு ஒன்று விலைமனு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டு உள்ளது.

4. .  மீளச் செலுத்தப்படாத ரூ. 1000.00 தொகைக் கட்டணம் ஒன்றினை பணமாகச் செலுத்தியதன் பின்னர், கொழும்பு 10, டீ,ஆர்.விஜேவர்தன மாவத்தை, இலக்கம் 400, சமாகம் மதுரவின் 02 ஆம் மாடியில் அமைந்துள்ள தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின், கணக்குகள் பிரிவில் உரிய விலைமனு கோரல் ஆவணங்களின் ஆங்கிலப் பிரதியின் முழுமையான தொகுதி ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முடியும். 2022.09.19 ஆம் திகதி தொடக்கம் 2022.10.10 ஆம் திகதி வரை  வாரத்தின் கடமை நாட்களில் மு.. 9.00 மணி தொடக்கம்​ பி.. 3.00 மணி வரை விலைமனு கோரும் ஆவணங்கள் விநியோகிக்கப்படும்.

5.    விலைமனுதாரர்களுக்கு, விலைமனு கோரலுக்கு முன்னரான  கூட்டம் ஒன்று 2022.09.28  ஆம் திகதி மு.ப. 11.00 மணிக்கு மேற்படி முகவரியில் அமைந்துள்ள தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தில் நடைபெறும்.

6.    சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விலைமனு ஆவணத்தின்  இரண்டு பிரதிகளுடன் “மூலப்பிரதி” மற்றும் “இரண்டாவது பிரதி”  எனத் தெளிவாகக் குறிப்பிட்டு 2022.10.11  ஆந்திகதி பி.. 2.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவோ அல்லது கொழும்பு 10, டீ,ஆர்.விஜேவர்தன மாவத்தை, இலக்கம் 400, சமாகம் மதுரவின் 02 மாடியில் அமைந்துள்ள தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின், கணக்காளரின் உத்தியோகபூர்வ அறையில் வைக்கப்பட்டுள்ள கேள்விப்பத்திரப் பெட்டியில் இடவோ வேண்டும்.

7.    தாமதமாகிக் கிடைக்கப்பெறும் விலைமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதுடன், அவற்றை திறந்து பார்க்காது மீளத் திருப்பி  அனுப்பப்படும். இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக அனுப்பப்படும் விலைமனுக்கள் பொறுப்பேற்காது நிராகரிக்கப்படும். 

8.    விலைமனு ஆவணத்தினை உள்ளே இட்டு அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “தொடர்ச்சியான மின் விநியோக அலகுகள் 02  மற்றும் கணினி சேர்வர் இயந்திரங்கள் 02  என்பவற்றினை விநியோகித்தல், நிறுவுதல், பரீட்சித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய     நடவடிக்கைகளைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு” எனத்  தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.

9.    விலைமனு கோரும் நேரம் முடிவடைந்தவுடன் உடனடியாக, விலைமனுதாரர்கள் அல்லது அவர்களின் அதிகாரம் பெற்ற முகவர்களின் முன்னிலையில் விலைமனுக்களைத் திறந்து வைத்தல் மேற்கொள்ளப்படும்.

10.  இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட இலங்கையில் நடைமுறையில் உள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட வணிக வங்கி ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட  ரூபாய் 60,000.00 (இலங்கையில் செல்லுபடியாகும் ரூபாய் பண அலகுகளில் அறுபதாயிரம் ரூபாய்) பெறுமதியான விலைமனுக் காப்பீடு ஒன்று சகல விலைமனுக்களுடனும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். விலைமனுக் காப்பீடானது நிபந்தனைகள் அற்ற விண்ணப்பப் பிணைமுறி வடிவில் முன்வைக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், 2022.12.27 ஆம் திகதி வரை (விலைமனு கோரல் பூர்த்தியடையும் தினம் தொடக்கம் 77 நாட்கள் வரையான காலப்பகுதி ஒன்றிற்கு) செல்லுபடியாதல் வேண்டும்.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பில் அல்லாத விலைமனுக்கள் மறுமொழியற்ற விலைமனுக்களாகக் கருதப்படும்.  

11.  உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்யும் விலைமனுதாரர்களைத் தெரிவு செய்தல்  தொடர்பான இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ளும் அதிகாரம் தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் திணைக்களப் பெறுகைகள் குழுவிற்கு உரித்தானதாகும்.

12.  இது தொடர்பான மேலதிக தகவல்களை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு  பெற்றுக்கொள்ள முடியும்.

·         பணிப்பாளர் (தகவல் மற்றும் பரீட்சிப்பு)  : 0112669178

·          கணக்காளர் -                                         : 0112669177

·         தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர்        : 0112689368

 

தலைவர்

திணைக்களப் பெறுகைகள் குழு,

தேசிய புலமைச் சொத்து அலுவலகம்,

3 ஆவது மாடி, “சமாகம் மெதுர”

இல. 400, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை,

 

கொழும்பு 10.

சமீபத்திய செய்திகள்