புவியியல் குறிகாட்டி என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நாடு அல்லது நாட்டில் ஓரிடம்) மூல உற்பத்தியாக இருப்பதன் காரணமாக அந்த பொருட்களுக்கு விசேட தரம், பண்பு அல்லது மதிப்பு என்பவற்றை சுட்டிக்காட்டுகிற பொருளின் மீது பயன்படுத்துகிற பெயர் அல்லது அடையாளம். (இலங்கைத் தேயிலை, இலங்கைக் கறுவா, இலங்கை இரத்தினக்கல், நுவரெலியா தேயிலை, றுகுணு தயிர் போன்றவை)

ஏன் பாதுகாக்கப்படுகிறது?

குறித்த பொருள் தரத்தின், பண்பின், மதிப்பின் அடையாளத்தைக் கொண்டிருப்பதால் வியாபார ரீதியில் அது மிகவும் பயனளிக்கிறது. அதை தவறாகப் பயன்படுத்துவது அல்லது துஷ்பிரயோகம் செய்வது புவியியல் குறிகாட்டியின் உரிமையாளர் மற்றும் நுகர்வோர் ஆகிய இருவருக்கும் தீங்கு விளைவிக்கலாம்.

வியாபாரச் சின்னம் எதிர் புவியியல் குறிகாட்டி

இது பல்வேறு தொழில் முயற்சியில் பண்டங்களை அல்லது சேவைகளை அடையாளப்படுத்துவதற்கு ஒரு சின்னம் உதவுகிறது. புவியியல் குறிகாட்டி  நுகர்வோருக்கும் வர்த்தகர்களுக்கும் அந்த உற்பத்தி குறிப்பிட்ட இடத்தை மூல இடமாகக் கொண்டிருக்கிறது மற்றும் அதற்கு சில விசேட தரம், பண்பு அல்லது மதிப்பு உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறது.

எப்படி பாதுகாக்கப்படுகிறது?

ஒரு குறிப்பிட்ட பொருள் அதன் குறிப்பிட்ட மூல இடத்தைக் கொண்டிருக்காவிட்டால் அதைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் புவியியல் குறிகாட்டியை சட்டம் பாதுகாக்கிறது. அதை பயன்படுத்துவதை நிறுத்தும்படி நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். இலங்கையில் புவியியல் குறிகாட்டி பதிவுசெய்யாமலே பாதுகாக்கப்படுகிறது. மேலும் புவியியல் குறிகாட்டி அநீதியான போட்டி, சான்றுப்படுத்தப்பட்ட சின்னங்கள் மற்றும் கூட்டுச் சின்னங்கள் என்பவற்றை சட்டத்தின் கீழ் பாதுகாக்கிறது. புவியியல் குறிகாட்டியைப் பொறுத்தவகையில் பிறழ்கூற்றும் ஒரு குற்றமாகும்.

சட்டத்தின் திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து புவியியல் குறிகாட்டியை இலங்கையில் விசேடமாக புவியியல் குறிகாட்டியாகப் பதிவுசெய்யப்படுகிறது. இது 2017ஆம் ஆண்டு ஆரம்பமாகும்.

வெளிநாட்டில் பாதுகாத்தல்

இலங்கையின் புவியியல் குறிகாட்டியை உலக வர்த்தக அமைப்பின் அங்கத்துவ நாடுகள் அனைத்திலும் அந்தந்த நாடுகளின் தேசிய சட்டத்தின் கீழ் பாதுகாக்க முடியும். (உதா: புவியியல் குறிகாட்டி இந்தியாவில் புவியியல் குறிகாட்டி சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படுகிறது. அமெரிக்காவில் குறியீட்டு சான்றிதழாகப் பதிவுசெய்யப்படுகிறது)

சமீபத்திய செய்திகள்