வியாபாரச் சின்னம் என்றால் என்ன?

ஒரு சின்னம் - வியாபாரச் சின்னம் அல்லது சேவை சின்னம் - பல்வேறு தொழில் முயற்சிகளில் பண்டங்களை அல்லது சேவைகளை அடையாளம் காண்பதற்கு கண்ணுக்குப் புலப்படும் அடையாளமாகும். வியாபாரச் சின்னம் பண்டங்களையும் சேவை சின்னம் சேவைகளையும் குறிக்கிறது. அத்துடன், இன்னும் இரண்டுவகைச் சின்னங்கள் இருக்கின்றன. அவை சான்றுப்படுத்தல் சின்னங்கள் மற்றும் கூட்டுச் சின்னங்கள் என்பவையாகும். சான்றுப்படுத்தல் சின்னம் என்பது ஒரு பொருளின் அல்லது சேவையின் தரத்தை வரைவிலக்கணப்படுத்துகிறது. இதை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு இந்தச் சின்னத்தின் உரிமையாளரால் அதிகாரமளிக்கப்படுகிறது. கூட்டுச் சின்னம் என்பது பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் சின்னத்தைப் பயன்படுத்துகின்ற  பல்வேறு தொழில் முயற்சிகளின் பண்டங்களின் அல்லது சேவைகளின் பொதுவான பண்புகளை அடையாளம் காண்பதற்கான சின்னமாகும்.

ஒரு குறியீட்டை உருவாக்குவது எது?

ஒரு சின்னம், சொல், குறியீடு, அடையாளம், எழுத்துக்கள், எண்கள், ஒரு பெயர், குடும்பப் பெயர் அல்லது புவியியல் பெயர், வர்ணங்களின் கலவை அல்லது வர்ணங்களின் ஒழுங்கு, பண்டங்களின் வடிவம் அல்லது உள்ளடக்கம் போன்றவற்றைக் கொண்டிருக்கும். கண்ணுக்குப் புலப்படக்கூடிய அடையாளம் எப்பொழுதும் பல்வேறு தொழில்முயற்சிகளின் பண்டங்களை அல்லது சேவைகளை அடையாளம் காணக்கூடியதாக இருக்க வேண்டும். (அது தெளிவாக இருக்க வேண்டும்)

சின்னத்தின் செயற்பாடுகள்

அது பின்வருமாறு பல செயற்பாடுகளைக் கொண்டிருக்கிறது:-

  • பண்டங்கள் அல்லது சேவைகள் அதன் உரிமையாளரை ஏனையேரிடமிருந்து அடையாளப்படுத்துகிறது.;
  • பண்டங்கள் அல்லது சேவைகளின் மூலத்தை சுட்டிக்காட்டுகிறது;
  • உரிமையாளரின் பண்டங்களை அல்லது சேவைகளை தனித்துவமானதாக்குகிறது;
  • உரிமையாளர் வாடிக்கையாளரை அடையக்கூடியதாக இருக்கிறது;
  • சந்தை போன்ற இடங்களில் நுகர்வோர் தெரிவுசெய்வதற்கு உதவுகிறது.

பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத சின்னங்கள்

பதிவுசெய்யப்பட்ட சின்னம், சட்டத்தின் கீழ் தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட சின்னமாகும். நீங்கள் பதிவுசெய்யாமல்கூட ஒரு சின்னத்தைப் பயன்படுத்த முடியும். பதிவுசெய்யப்படாத சின்னங்களை நியாயமற்ற போட்டிகள் சட்டம் அல்லது அனுமதிப்பதற்கான பொது சட்டத்தின் கீழ் பாதுகாக்க முடியும்.

ஏன் பதிவுசெய்யப்படுகிறது?

நீங்கள் உங்கள் சின்னத்தைப் பதிவுசெய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு சின்னத்தைப் பதிவுசெய்வது உரிமையாளருக்கு அதை பயன்படுத்துவற்கு, ஈடுபடுத்துவதற்கு மற்றும் அதிகாரமளிப்பதற்கு  தனித்துவமான உரிமையை வழங்குகிறது. நீங்கள் இதை சிவில் நீதிமன்றத்தின் அல்லது குற்றவியல் நீதிமன்றத்தின் அல்லது அவையிரண்டின் ஊடாகவும் இந்த உரிமைகளை இலகுவாகவும் வினைத்திறன்மிக்கவகையிலும் செயற்படுத்த முடியும். மற்றவர்கள் உங்களுடைய சின்னத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதை அல்லது அதையொத்த சின்னத்தைப் பயன்படுத்துவதை தடுக்க முடியும்.  உங்களுக்கு இழப்பீடு கோருவதற்குக்கூட உரித்துண்டு.

பதிவுசெய்யக்கூடிய சின்னங்கள்

2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தின் 103 மற்றும் 104 ஆகிய பிரிவுகளின் கீழ் ஏல்தகவற்றதாக இருத்தலாகாத சின்னங்களைப் பதிவுசெய்ய முடியும். ஒரு சின்னம் உதாரணமாக, குறித்த பண்டங்கள் சேவைகளை விபரிக்காவிட்டால், அது உங்களுடைய பண்டங்களை அல்லது சேவைகளை மற்றவற்லிருந்து அடையாளப்படுத்தாவிட்டால் மற்றும் ஏனைய ஜனரஞ்சகமான சின்னங்களை ஏனைய பதிவுசெய்யப்பட்ட சின்னங்களை ஒத்ததாக இருந்தால் அது அனுமதிக்கப்படாத சின்னமாக இருக்கும்.

பதிவு நடவடிக்கைமுறையின் பாய்வு வரைபடம்

பதிவுசெய்வது எப்படி?

A1 படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பத்தைத் தயாரிக்கவும். விண்ணப்பத்தைத் தயாரிக்கும் பணியில் பல படிமுறைகள் இருக்கின்றன. சின்னம் முறைசார்ந்த தேவைகளுடன் இணங்கியொழுகுகின்றதா என்பதைப் பரிசோதிக்கப்படுகிறது. அத்துடன் அது சட்டத்தின் 103 மற்றும் 104 ஆகிய பிரிவுகளின் கீழ் அனுமதியளிக்கப்படாததாக இருக்கின்றதா என்பதும் பரிசோதிக்கப்படுகிறது. புலமைச் சொத்து அலுவலகம் அதை மறுத்தால் நீங்கள் அந்த தீர்மானத்திற்கு எதிராக விடயங்களைச் சமர்ப்பிக்க முடியும். அல்லது மறுக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் விசாரிக்கும்படி கேட்க முடியும். அது மேலும் மறுக்கப்பட்டால் நீங்கள் நீதிமன்றத்தில் அந்த தீர்மானத்தை சவாலுக்குட்படுத்த முடியும்.(வாணிப மேல் நீதிமன்றம்)

சின்னம் முதலில் வர்த்தமானியில் வெளியிடுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வெளியிட்டதன் பின்னர் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பொதுமக்களுக்கு மூன்றுமாதகால அவகாசம் வழங்கப்படுகின்றது. ஏதேனும் எதிர்ப்பு இருந்தால், புலமைச்சொத்து அலுவலகம் அதன் பிரதியொன்றை விண்ணப்பதாரருக்கு அனுப்பிவைக்கும். அந்த எதிர்ப்புக்கு எதிராக விண்ணப்பதாரர்களின் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என கோரப்படும். அதன் பின்னர் புலமைச்சொத்து சபை ஒரு விசாரணையை நடத்தும். தேவைப்பட்டால் அதன்போது விண்ணப்பதாரர் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தவர் ஆகிய இருவருடைய பங்கேற்புடன் விசாரணையை நடத்தும். விசாரணையின் பின்னர் சின்னம் ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். அது மறுக்கப்பட்டால் விண்ணப்பதாரர் அந்த தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் பதிவு கட்டணத்தைச் செலுத்தியதன் பின்னர் பதிவுசெய்யப்படும். (தயவுசெய்து சட்டத்தின் V பகுதியையும் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளையும் பார்க்கவும்)

யார் பதிவுசெய்ய முடியும்?

எவரேனும் ஒரு நபர் அல்லது பல நபர்களைக் கொண்ட கூட்டுத்தாபனம் மற்றும் தனி கூட்டமைப்பு. (தனிப்பட்டவர்கள், கம்பனி, பங்காண்மை, சங்கம் போன்றவை).

கட்டணங்கள்

தயவுசெய்து கட்டண அட்டவணையைப் பார்க்கவும்.

செல்லுபடியான காலமும் புதுப்பித்தலும்

பதிவு விண்ணப்பித்த திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு செல்லுபடியாகும். அத்துடன் கட்டணம் செலுத்துவதன் மூலம் மேலும் 10 வருடங்களுக்கு புதுப்பிக்கப்படுகிறது. கட்டணங்களுக்கு தயவுசெய்து கட்டண அட்டவணையைப் பார்க்கவும்.

வெளிநாட்டில் பாதுகாத்தல்

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட சின்னங்கள் இலங்கையில் மட்டும் செல்லுபடியாகும். விண்ணப்பதாரர் ஏனைய நாடுகளில் வியாபாரம் செய்தால் சின்னத்தை அந்த நாடுகளில் பதிவுசெய்வது நல்லது. விண்ணப்பதாரர் குறித்த தேசிய சட்டத்தின் கீழ் பாதுகாப்பைத் தேடினால் ஒவ்வொரு நாட்டிலும் விண்ணப்பிக்க வேண்டும். (இலங்கை மெட்ரிட் முறைமையில் அங்கத்துவ நாடு அல்ல. அதனால் விண்ணப்பதாரர் சின்னத்தைப் பதிவுசெய்ய விரும்புகிற எல்லா நாடுகளையும் குறிப்பிட்டு சர்வதேச விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்) எவ்வாறாயினும், பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் அதன் அங்கத்துவ நாடுகளில் கைத்தொழில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக முன்னுரிமை கோர முடியும். (இலங்கையில் விண்ணப்பித்த திகதியிலிருந்து 6 மாதங்களுக்குள்)

வியாபாரப் பெயர்கள்

வியாபாரப் பெயர் என்பது ஒரு பெயரின் கீழ் ஒரு நபர் செய்கின்ற வியாபாரமாகும் - விண்ணப்பதாரரின் பெயர், பங்காளர்களின் பெயர் போன்றவை. புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் வியாபாரப் பெயர்களைப் பாதுகாக்க முடியும். எவ்வாறாயினும், அதைக் குறியீடாக மாத்திரம் பதிவுசெய்ய முடியும். அந்தவகையில், வியாபாரப் பெயரை ஒரு குறியீடாகப் பதிவுசெய்வது நல்லது.

முகவர்கள்

பதிவுசெய்யப்பட்ட புலமைச்சொத்து முகவர்கள் இருக்கின்றனர். அவர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பதாரியின் சார்பில் பொறுப்பேற்க முடியும் அல்லது விண்ணப்பதாரியின் சார்பில் பதிவுசெய்ய முடியும். அத்துடன் ஆக்கவுரிமை மற்றும் கைத்தொழில் வடிவமைப்பு போன்ற ஏனைய விண்ணப்பங்களையும் பதிவுசெய்வார்கள். (முகவர்கள் பட்டியலைப் பார்க்கவும்)

சமீபத்திய செய்திகள்