புலமைச் சொத்து என்றால் என்ன?

புலமைச் சொத்து என்பதன் கருத்து மனிதனுடைய மூளையினால் உருவாக்கப்பட்ட ஆக்கம் ஒன்றிற்கான உரிமை என்பதாகும். இது பொதுவாக பின்வரும் உரிமைகளை உள்ளடக்குகின்றது.

  • நாவல்கள், கவிதைகள் மற்றும் நாடகங்கள், திரைப்படங்கள், இசை படைப்புகள், கணனி நிகழ்ச்சித்திட்டங்கள், தரவுத் தலங்கள், ஓவியங்கள், சித்திரங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள் மற்றும் கட்டிடகலை வடிவமைப்புகள் போன்ற இலக்கிய மற்றும் கலை படைப்புகள்;
  • அரங்கக்காட்சி கலைஞர்களின் அரங்கக் காட்சிகள், ஒலிப்பதிவுகள் மற்றும் ஒலிபரப்புகள்;
  • புத்தாக்கங்கள்;
  • கைத்தொழில் வடிவமைப்புகள்;
  • வியாபாரச் சின்னங்கள், சேவை சின்னங்கள், வியாபாரப் பெயர்கள், பதவிகள்;
  • நியாயமற்ற போட்டிகளுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும்
  • ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுகளின் மாதிரி வடிவங்கள், புதிய வகை தாவரங்கள் (தாவரங்களைப் பயரிடுவோரின் உரிமைகள்), புவியியல் குறிகாட்டிகள் வியாபார இரகசியங்கள் உள்ளிட்ட வெளியிடப்படாத தகவல்கள் போன்ற அனைத்து விஞ்ஞான, கைத்தொழில், இலக்கிய மற்றும் கலைத் துறைகளின் ஏனைய அனைத்து உரிமைகள்.

புலமைச் சொத்து மரபுரீதியாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (i) கைத்தொழில் சொத்து, இதில் புத்தாக்கங்களுக்கான ஆக்கவுரிமை, வியாபாரச் சின்னங்கள் மற்றும் சேவை சின்னங்கள், கைத்தொழில் வடிவமைப்பு மற்றும் புவியியல் குறிகாட்டிகள் என்பவை உள்ளடங்குகின்றன. (ii) பதிப்புரிமை, இதில் இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகள் உள்ளடங்குகின்றன. அரங்கக் காட்சி கலைஞர்கள், ஒலிப்பதிவு தயாரிப்பாளர்கள் மற்றும் ஒலிபரப்பு அமைப்புகள் என்பவற்றுடன் தொடர்புடைய உரிமைகள் அல்லது அயல் உரிமைகள் என்பவை உள்ளடங்குகின்றன.

புலமைச் சொத்து உரிமைகள் ஏனைய சொத்து உரிமைகள் பண்புகளுடன் பகிர்ந்துகொள்கின்றன - அவற்றை சொந்தமாக்கிக்கொள்ள முடியும், தனிமைப்படுத்த முடியும், அவற்றிற்கு அனுமதிப் பத்திரமளிக்க முடியும். ஓர் ஆக்கவுரிமை வியாபார சின்னம் அல்லது பதிப்புரிமை என்பவற்றின் சொந்தக்காரராக அல்லது உருவாக்குனராக அவருடைய சொந்த உருவாக்கத்திலிருந்து நன்மை பெறுவதற்கு அவர்கள் அனுமதிக்கின்னறனர். இந்த உரிமைகள் புலமைச் சொத்து மீதான பல் சர்வதேச சமவாயங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

புலமைச் சொத்து மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவது ஏன்?

மனித உருவாக்கங்கள் மனித நாகரீகத்தின் அத்திவாரமாக இருக்கின்றமை, முன்னேற்றம், நல்வாழ்வு போன்ற வலுவான காரணங்கள் இருக்கின்றன. உருவாக்க முயற்சியைப் பாதுகாப்பது என்பது மேலும் உருவாக்கத்தை ஊக்கப்படுத்துகின்றது, முதலீடுகளை உயர்த்துகிறது, தொழில்நுட்ப மாற்றங்களை ஊக்குவிக்கிறது மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகிறது, புதிய கைத்தொழில்களையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குகின்றது. அத்துடன் வாழ்க்கைத்தரத்தையும் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் மேம்படுத்துகின்ற அதேநேரத்தில் வினைத்திறன்மிக்க சமத்துவமான புலமைச் சொத்து முறைமை பயனுறுதிமிக்க வகையில் பொருளாதாரம், தொழில்நுட்பம், சமூக கலாசார அபிவிருத்தி என்பவற்றுக்குப் பங்களிப்புச் செய்கின்றது. புலமைச் சொத்து உருவாக்குனர்களின் உரிமைகளுக்கும் முழு சமூகத்தின் ஆர்வத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதற்கு முயற்சியெடுக்கிறது. அந்தவகையில் அனைவரின் நன்மைக்காக உருவாக்கத்தில் மனித முயற்சி முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு சூழலை அறிமுகப்படுத்துகின்றது.

சர்வதேச பரிமாணங்கள்

உலக புலமைச் சொத்து அமைப்பு (WIPO), ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒரு விசேட முகவராகத் திகழ்கிறது. அதன் பணிப்பாணையில் அனைத்து அங்கத்துவ நாடுகளின் புலமைச் சொத்து உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவது உள்ளடக்கபட்டுள்ளது. உலக புலமைச் சொத்து அமைப்பு தற்பொழுது புலமைச் சொத்து மீது 26 சர்வதேச சமவாயங்களை நிர்வகிக்கிறது. 2017 சனவரி 01ஆம் திகதியன்று உலக புலமைச் சொத்து அமைப்பில் 189 அங்கத்துவ நாடுகள் இருக்கின்றன. உலக புலமைச் சொத்து அமைப்பின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. அதன் இணையத்தளம் : http://www.wipo.int.

மேலும், புலமைச் சொத்தின் குறிப்பிட்ட பகுதிகளை நிர்வகிக்கின்ற ஏனைய சர்வதேச அமைப்புகள் இருக்கின்றன. அவையாவன, யுனெஸ்கோ, (சர்வதேச பதிப்புரிமை சமவாயம்), உலக வர்த்தக அமைப்பு (புலமைச் சொத்து உரிமைகளின் வர்த்தகத்துடன் தொடர்புடைய விடயங்கள் அடங்கிய உடன்படிக்கை - TRIPS உடன்படிக்கை) மற்றும் புதியவகை தாவரங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் (புதியவகை தாவரங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம்)

இலங்கையில்

இலங்கையில் தற்போது புலமைச் சொத்து முறைமை 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தின் மூலம் நிருவகிக்கப்படுகிறது. இதில் பல்வேறு புலமைச் சொத்து உரிமைகள் மற்றும் அவர்களின் கைப்பற்றுதல், முகாமைப்படுத்துதல், வலியுறுத்தி நடைமுறைப்படுத்துதல் என்பவற்றிற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது. இலங்கையில் இந்த சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள  தேசிய புலமைச் சொத்து அலுவலகம் ஓர் அரசாங்கத் திணைக்களமாகும். இது இலங்கையில் புலமைச் சொத்து முறைமைகளை நிர்வகிக்கும் பொறுப்புக்களை வகிக்கின்றது.

சமீபத்திய செய்திகள்