தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகம்

2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க தேசிய புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கை புலமைச் சொத்துக்கள் அலுவலகத்தின் பணிப்பாணை இலங்கை புலமைச் சொத்துக்கள் முறைமையின் கீழ் இருக்கின்றது. இது முதலில் 1979 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் தொகுதியின் ஏற்பாடுகளின் கீழ் அதே பணிப்பாணையுடன் 1982 ஆம் ஆண்டு சனவரி 1ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

தொலைநோக்கு

ஒரு முன்னணி அரச நிறுவனம் என்ற வகையில் நாட்டின் சந்தையை திசைமுகமாகக் கொண்ட இலங்கை புலமைச் சொத்துக்கள் முறைமையை அடைவதை நோக்கமாகக் கொண்டு உயர்ந்த தரத்தை குறிக்கோளாகக் கொண்டு உற்பத்தித் திறன்மிக்க சேவைகளை வழங்குதல்.

செயற்பணி

வலுவான பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்கின்ற தொழில்முயற்சிகளின் நிர்மாணத்தை மேம்படுத்துகின்ற மற்றும் புதிய முதலீடுகளை ஊக்குவிக்கின்ற புலமைச் சொத்துக்கள் முறைமையை உறுதிப்படுத்துதல்.

செயற்பாடுகள்

வியாபாரச் சின்னங்கள், ஆக்கவுரிமை, கைத்தொழில் வடிமைப்புகள் மற்றும் கூட்டு முகாமைத்துவ சங்கங்களை நிருவகித்தல் என்பவற்றின் பதிவுகள் உட்பட புலமைச் சொத்துக்களை நிருவகித்தல்.

  • புலமைச் சொத்து தகவல்களை சேகரித்தல் மற்றும் பரப்புதல்.
  • புலமைச் சொத்து விடயம் தொடர்பாக விழிப்புணர்வூட்டல்.
  • பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலமைச் சொத்துக்களைப் பயன்படுத்துவதை மேம்படுத்துதல்.
  • புலமைச் சொத்து சம்பந்தமான இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுதல் மற்றும் புலமைச் சொத்துக்கள் விடயத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டுறவை மேம்படுத்துதல்.
  • புலமைச் சொத்துக்கள் தொடர்பான கொள்கைகளை முன்மொழிதல்.
  • பதிப்புரிமை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உரிமைகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்த்தல், புலமைச் சொத்து உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்தல்.
  • புலமைச் சொத்து முகவர்களைப் பதிவு செய்தல் மற்றும் நிருவகித்தல்.

சமீபத்திய செய்திகள்