பதிப்புரிமை என்றால் என்ன?

பதிப்புரிமை என்றால் படைப்பாளிகளுக்கு அவர்களுடைய இலக்கிய மற்றும் கலைப் படைப்புகளுக்கு சட்டத்தின் மூலம் வழங்குகின்ற உரிமையாகும். அந்த உரிமைகள் இரண்டு வகையாக இருக்கின்றன. அவாயாவன (அ) பொருளாதார உரிமைகள் (ஆ) ஒழுக்கக் கட்டுப்பாட்டு உரிமைகள். பொருளாதார உரிமையில் மீள் உருவாக்கம், விற்பனை, வாடகை, விநியோகம், பொதுமக்களுக்கு தொடர்பாடல் மற்றும் மொழிபெயர்ப்பு போன்றவை உள்ளடங்குகின்றன. அதே வேளையில் ஒழுக்கக்கட்டுப்பாட்டு உரிமையில் ஆசரியர் என்ற உரிமையைக் கோருதல் மற்றும் படைப்பு திரிபுபடுத்தப்படுவதை அல்லது வெட்டிக் குறைப்பதை எதிர்க்கும் உரிமை என்பவை உள்ளடங்குகின்றன.

ஏன் பாதுகாக்க வேண்டும்?

பதிப்புரிமை இலக்கிய படைப்பின் மற்றும் கலைப்படைப்பின் ஆசிரியரின் உரிமையைப் பாதுகாக்கின்றது. அத்துடன் பொருளாதார நன்மைகளையும் அடையாளப்படுத்தலையும் உறுதிப்படுத்துகிறது. அதன் மூலம் இலக்கியம் மற்றும் கலைப்படைப்புத் துறையில் உருவாக்கத்தையும் முதலீடுகளையும் மேம்படுத்துகிறது. அத்தகைய படைப்புகள் பொருளாதார அபிவிருத்தி, கல்வி, கலாசாரம் மற்றும் வாழக்கையின் மகிழ்ச்சி என்பவற்றை உயர்த்துகிறது.

உள்ளடக்கப்படுவது என்றால் என்ன?

பதிப்புரிமை மூல இலக்கியம் மற்றும் கலைப்படைப்புகளை உருவாக்குகின்றது. நூல்கள் பொது ஆக்கங்கள், கணினி நிகழ்ச்சித்திட்டங்கள், கட்டுரைகள், வாய்மூல படைப்புகள், சொற்பொழிவுகள், விரிவுரைகள் போன்றவை, அடிப்படை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள்,சித்திரங்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் என்பவை உள்ளடங்குகின்றன. தரவுத் தளம் மற்றும் மொழிபெயர்ப்புகள் போன்ற படைப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன.

பதிப்புரிமையைப் பதிவுசெய்ய வேண்டிய அவசியமில்லை

இலங்கையில் பதிவுபோன்ற முறைகள் இல்லாமல் பாதுகாப்பு என்பது பொருத்தமாக இருக்கிறது. பதிப்புரிமை ஒரு படைப்பு வெளியிடப்பட்ட மற்றும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாகச்செய்த திகதியிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

யாருக்கு சொந்தமாகிறது?

ஆசிரியர்கள்தான் பொருளாதார உரிமைக்கு சொந்தக்காரர்கள். ஆனால் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. அதவாது ஊழியர் முதலாளிக்காக உருவாக்கியவை முதலாளியையே சேர்கின்றது. பொருளாதார உரிமைகளை ஒப்படைக்க அல்லது அதிகாரமளிக்க முடியும். ஒழுக்க கட்டுப்பாட்டு உரிமை எப்பொழுதும் ஆசிரியரையே சேரும்.

கால எல்லை

இலங்கையில் பதிப்புரிமை ஓர் ஆசிரியையின் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கப்படுகிறது. அத்துடன் ஆசிரியர் இறந்ததன் பின்னர் 70 வருடங்களுக்குப் பாதுகாக்கப்படுகிறது.

நிர்வாகம்

பதிப்புரிமையின் சொந்தக்காரர் தனிப்பட்டமுறையில் உரிமைகளை நிருவகிக்க முடியும். மாற்றீடாக உரிமையாளர் உரிமைகளை கூட்டாகவும் நிருவகிக்கவும் முடியும். கூட்டாக நிருவகித்தல் என்பது உரிமையாளர்கள் ஓர் அமைப்பை உருவாக்க முடியும். அந்த அமைப்பு அவர்களின் சார்பில் உரிமையாளர்களுக்கு அதிகாரமளித்தல், கட்டணங்களைச் சேகரித்தல், பயன்பாட்டை கண்காணித்தல் மற்றும் உரிமைகளுக்கு கீழ்படிய மறுத்தல் மற்றும் உரிமைகளை செயற்படுத்துதல் என்பவை அதன் கருத்தாகும்.

வெளிநாட்டில் பாதுகாத்தல்

இலங்கைப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் அனைத்து பர்னி (Berne) உடன்படிக்கை செய்துகொண்ட அங்கத்துவ நாடுகளில் அந்த நாடுகளின் தேசிய சட்டத்தின் கீழ் இலக்கிய மற்றும் கலைப்படைப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.

நாட்டார் கதைகள்

இலங்கையின் நாட்டார் கதைகள் அதிகாரமளிக்கப்படாத பயன்பாட்டுக்கு எதிராகப் பாதுகாக்கப்படுகின்றன.

ஒழுங்குவிதி

புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதி வெளியிடப்பட்டுள்ளது,

சமீபத்திய செய்திகள்