"வெற்றிகரமான  ஆக்கவுரிமை விண்ணப்பம் ஒன்றினை  எவ்வாறு தயாரிப்பது – ஆக்கவுரிமை பரீட்சகரின் பார்வையில் ஆலோசனை"  தொடர்பான  விழிப்புணர்வு அமர்வு (ஸூம்  தொழிநுட்பத்தின் ஊடாக நிகழ்நிலையில்) – 2022 ஏப்றல் மாதம் 26 ஆம் திகதி

உலக புலமைச் சொத்துக்கள் தினம் – 2022 ஏப்றல் மாதம் 26 ஆம் திகதி

புலமைச் சொத்து  மற்றும் இளைஞர்கள்: சிறந்த எதிர்காலத்திற்கான புத்தாக்கம்

 

உலகின் இளம் கண்டுபிடிப்பாளர்களின் புத்தி கூர்மை, படைப்பாற்றல், உந்துதல் மற்றும் தொலைநோக்கு ஆகியவை நாட்டின் எதிர்காலமாக கருதப்படுகின்றன. ஒரு கண்டுபிடிப்புக்காக  ஆக்கவுரிமை பெறுவதற்கு புத்தாக்க முயற்சியில் ஆராய்ச்சி தேவை மற்றும் பின்னர் சரியான முறையில் ஆக்கவுரிமை விவரக்குறிப்பை உருவாக்க வேண்டும். விபரக் கூற்றானது பொதுவாக தொழில்நுட்ப-சட்ட ரீதியானது.

2022 உலக புலமைச் சொத்துக்கள் தினத்தினைக் கொண்டாடும் வகையில், தேசிய புலமைச் சொத்து அலுவலகம் மேற்படி கூட்ட அமர்வினை ஏற்பாடு செய்கின்றது. உலக புலமைச் சொத்துக்கள் அமைப்பின் (WIPO) தேர்வு மற்றும் பயிற்சிப் பிரிவின் கூட்டுறவுத் தலைவர் கலாநிதி லுட்ஸ் மைலந்தர் அவர்கள் மேற்படி  இரண்டரை மணிநேர அமர்வின் பேச்சாளராக இருப்பார். இறுதியில் கேள்வி பதில் அமர்வும் நடைபெறும், அங்கு முக்கியமான கேள்விகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நாட்டிலுள்ள TISC அலுவலர் குழாம், பல்கலைக்கழக கல்வியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மிக முக்கியமாக கண்டுபிடிப்பாளர்கள் கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி மேற்படி நிகழ்விற்காக பதிவு செய்ய முடியும். பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், முன்கூட்டியே பதிவு செய்வதை ஊக்குவிக்கின்றோம்.

 இந்த வெபினாருக்காக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்:

https://wipo-int.zoom.us/webinar/register/WN_vYeArGdhQvSdvmOlb5VSWg

 

NIPO

25/04/2022

சமீபத்திய செய்திகள்