ஆக்கவுரிமை தயாரிக்கப்படுவது ஏன்?

ஆக்கவுரிமை புத்தாக்கங்களை பாதுகாப்பதை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் அதனால் ஏற்படும் நன்மைகளை புத்தாக்குனர்கள் பெற்றுக்கொள்ளுவதை உறுதிப்படுத்துவதன் ஊடாக புத்தாக்குனர்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் புத்தாக்கங்களுக்கு ஊக்கமளிக்கிறது. இது பொருளாதார அபிவிருத்தியையும் தொழில்நுட்ப அபிவிருத்தியையும் ஊக்குவிக்கிறது. ஆக்கவுரிமை ஆவணங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் அவற்றைப் பார்வையிட முடியும். அவற்றில் ஆய்வாளர்கள், புத்தாக்குனர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் ஆகியோருக்குத் தேவையான நிறைய தகவல்கள் இருக்கின்றன. புதிய அபிவிருத்திகள், R&D நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் என்பவற்றை தொடர்ந்து செயற்படுத்த முடியும்.

ஆக்கவுரிமை என்றால் என்ன?

புத்தாக்குனருக்கு ஏகபோக உரிமைக்காக அரசு ஆக்கவுரிமையை வழங்குகிறது. உதாரணமாக: மற்றவர்கள் அதைத் தயாரிப்பதை தடுப்பதற்கு, ஆக்கவுரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திகதியிலிருந்து 20 வருடங்களுக்கு தரமான புத்தாக்கங்களை மற்றவர்கள் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதற்காக அரசு இந்த ஆக்கவுரிமையை வழங்குகின்றது. இந்த ஆக்கவுரிமையின் உரிமையாளர் அவர் ஆக்கவுரிமை பெற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும், விற்க முடியும் அல்லது நிதிசார்ந்த பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

புத்தாக்கம் என்றால் என்ன?

புத்தாக்கம் என்பது தொழில்நுட்பத் துறையில் உள்ள பிரச்சினைக்கு ஒரு செயல்முறைத் தீர்வாகும். ஒரு புத்தாக்கம் ஓர் உற்பத்திக்கு அல்லது ஒரு நடவடிக்கைமுறைக்கு தொடர்புபடலாம்.

ஆக்கவுரிமை பெறுவதால் என்ன செய்ய முடியும்?

ஒரு புத்தாக்கம் (அ) புதியதாக (தற்பொழுதுள்ள அறிவுக்குத் தெரியாதவை) (ஆ) கைத்தொழில் ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய (செயற்படக்கூடிய மற்றும் இயங்கக்கூடிய) மற்றும் (இ) புத்தாக்கப் படிமுறையில் சம்பந்தப்படுகின்ற (அபிவிருத்தி அல்லது முன்னேற்றம் ஒரு குறிப்பிட்ட துறையில் சராசரித் திறமையுள்ள ஒரு நபருக்கு தெளிவுபடாதது) ஆக்கவுரிமை அளிக்கப்பட்ட பெறுமதியான ஒரு புத்தாக்கத்தின் மேம்பாட்டுக்கு ஓர் ஆக்கவுரிமை வழங்கப்படலாம். ஆனால் அது பயன்படுத்தப்படுகின்றபோது முதலாவது ஆக்கவுரிமை உரிமையாளரின் உரிமையை மீறுவதற்கான சாத்தியமுண்டு. அதனால் உபயோகிப்பதற்கு முன்னர் முதலாவத ஆக்கவுரிமை வைத்திருப்பவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது.

ஆக்கவுரிமை எப்படி வழங்கப்படுகின்றது?

P1 எனக் குறிப்பிடப்பட்டுள்ள (ஒழுங்குவிதிகளைப் பார்க்கவும்) படிவத்தைப் பயன்படுத்தி புலமைச் சொத்து அலுவலகத்திற்கு ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும். விண்ணப்ப படிவத்துடன் புத்தாக்கத்தை முழுமையாக, தெளிவாக விபரிக்கின்ற ஆவணத்தை குறிக்கப்பட்ட கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். (ஒழுங்குவிதிகளைப் பார்க்கவும்) சர்வதேச தேடல் அதிகார சபையினால் (ISA) தயாரிக்கப்பட்ட தேடல் அறிக்கை அல்லது மாற்றீடாக விண்ணப்பதாரர் தேடல் அறிக்கைக்காக உள்ளூர் பரிசோதகரை அமர்த்தும்படி புலமைச் சொத்து அலுவலகத்தைக் கேட்டுக்கொள்ளலாம்.

புலமைச் சொத்து அலுவலகம் புலமைச் சொத்து சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யும். தேடல் அறிக்கையுடன் முறைசார்ந்த தேவைகள்  நிறைவேற்றப்படுமானால் ஆக்கவுரிமை வழங்கப்படும். ஆக்கவுரிமை வழங்குவதற்கு முன்னர் புத்தாக்கம் வெளியிடப்படலாம்.(சர்வதேச வகையிலான தேடல் அறிக்கை கிடைக்காவிட்டால்)

புதுப்பித்தல்

ஆக்கவுரிமை பதியப்பட்ட திகதியிலிருந்து 20 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். ஆக்கவுரிமை வழங்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டாவது வருடத்திலிருந்து ஆக்கவுரிமையை கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். (கட்டணக் கட்டமைப்புக்கு தயவுசெய்து ஒழுஙங்குவிதியைப் பார்க்கவும்).

ஆக்கவுரிமைக்குட்படுத்தப்படாதவைகள் யாவை?

(i) கண்டுபிடிப்புகள், விஞ்ஞானக் கோட்பாடுகள் மற்றும்  கணித முறைகள்.

(ii) தாவரங்கள், மிருகங்கள், மரபணு நுண்ணுயிர்களைத் தவிர்த்து ஏனைய நுண்ணுயிர்கள், மற்றும் உயிரியல் அற்ற மற்றும் சிற்றின உயிரியல் நடைமுறைகள் தவிர்த்து மிருகங்களையும் தாவரங்களையும் உற்பத்தி செய்வதற்கான கடடாய உயிரியல் நடைமுறை.

(iii) திட்டங்கள், சட்டங்கள் அல்லது வியாபாரம் செய்யும் முறைகள், முழுமையாக உள நடவடிக்கைகளை செயலாற்றுகிற அல்லது விளையாட்டுகளை விளையாடுகின்றவை.

(iv) மனித உடம்பில் அல்லது மிருகத்தின் உடம்பில் சத்திரசிகிச்சை செய்கின்ற அல்லது சிகிச்சை அளிக்கும் முறைகள் அல்லது தசை பிடித்துவிடும் சிகிச்சை, மனித உடம்பில் மிருகத்தின் உடம்பில் மேற்கொள்ளுகின்ற நோயறியும் முறைகள்.

(v) பொதுமக்கள் ஒழுங்கு, நன்னெறி உட்பட மனிதனின், மிருகத்தின் அல்லது தாவரத்தின் வாழ்க்கை, சுகாதாரம் அல்லது இயற்கைக்கு கடுமையான மூட நம்பிக்கைகளைத் தவிர்த்தல் என்பவற்றைப் பாதுகாப்பதற்குத் தேவையான புத்தாக்கங்கள்.

நாட்டுக்கு வெளியே புத்தாக்கத்தைப் பாதுகாப்பது எப்படி?

ஓர் ஆக்கவுரிமை அது வழங்கப்பட்ட நாட்டில் மாத்திரம் செல்லுபடியாகும். கைத்தொழில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான பாரிஸ் சமவாயத்தில் இலங்கை அங்கத்தவராக இருப்பதனால், இலங்கையர்கள் பாரிஸ் சமவாயத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற ஏதேனும் ஒரு நாட்டில் அந்த நாட்டின் தேசிய சட்டத்தின் கீழ் அவர்களுடைய புத்தாக்கங்களுக்கு ஆக்கவுரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். பெரும்பாலும் எல்லா நாடுகளும் இந்த சமவாயத்தில் அங்கம் வகிக்கின்றன. விண்ணப்பதாரர் அங்கத்துவ நாட்டில் கைத்தொழில் சொத்தைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு பாரிஸ் சமவாயத்தின் கீழ் முன்னுரிமையளிக்கும்படி கோர முடியும். அதாவது ஏனைய அங்கத்துவ நாட்டில் விண்ணப்பித்த ஆரம்ப திகதியிலிருந்து செல்லுபடியாகும். (இலங்கையில் விண்ணப்பித்த 1 வருடத்திற்குள் விண்ணப்பித்திருந்தால்)

ஜெனீவாவில் உள்ள உலக புலமைச்சொத்து அமைப்பினால் (WIPO) நிருவகிக்கப்படுகின்ற  ஆக்கவுரிமை கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் PCT அனைத்து இலங்கைப் பிரசைகள் அல்லது இலங்கையில் குடியிருக்கின்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். நீங்கள் ஓரு விண்ணப்ப படிவத்தை நிரப்புவதன் மூலம் பல நாடுகளில் (ஆக்கவுரிமை கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் PCT அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்) ஆக்கவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரி பின்னர் தேசிய விண்ணப்பமாக சமர்ப்பிக்க விரும்பும் நாடுகளை ஆக்கவுரிமை கூட்டுறவு ஒப்பந்தத்தில் PCT குறிப்பிட வேண்டும். பல நாடுகளில் பல விண்ணபப்ங்களைத் தயாரிப்பதை விட ஆக்கவுரிமைக் கூட்டுறவு ஒப்பந்தம் PCT இலகுவான நடைமுறையாகும். வசிக்கின்ற நாட்டில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பத்தைப்போலவே ஆக்கவுரிமை கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் PCT உள்ள விண்ணப்பமும் இருக்கின்றது. (மேலதிக விபரங்களுக்கு www.wipo.int இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்)

சமீபத்திய செய்திகள்